WTBF இனால் இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளின் பட்மின்டன் விளையாட்டுத்துறை அபிவிருத்தி பங்களிப்பின் ஓர் அங்கமாக Badminton stringing Machine அவசியமாகவுள்ள மாவட்டங்களிற்கு முன்னுரிமையடிப்படையில் வழங்கப்பட்டு வருகின்றது.

இவை WTBF இன் புலம்பெயர் நாட்டுக்கிளைகளாலும் நலன்விரும்பிகளின் நேரடிவிருப்பிற்கு அமைவாகவும் இவ் விடயம் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.

உலகத் தமிழர் பூப்பந்தாட்ட பேரவையின் Technical Advisor & Chief Referee யும் ஆகிய Roman Pechous ( Swiss) மற்றும் அவரது துணைவியார் இருவரும் வவுனியா, திருகோணமலை ஆகிய மாவட்டங்களிற்கு ஏற்கனவே வழங்கியிருந்தார்கள்.

உலகத் தமிழர் பூப்பந்தாட்ட பேரவையின் கனடாக் கிளை நிர்வாக உறுப்பினர்கள் தமது முயற்சியினால் கனடாவாழ் திரு .ம.வாகீசன் (WTBF Central committee), திரு .இ. ஜனார்த்தனன் , திரு .ந.நிரஞ்சன் ஆகியோரது அனுசரணையைப் பெற்று மன்னார் மாவட்ட பூப்பந்தாட்ட அபிவிருத்தி சங்கத்திற்கு  Badminton Racket Stringing Machine ஒன்றை அண்மையில் வழங்கியிருந்தார்கள் . இதனை  கனடாக்கிளை செயலாளர்   திரு சி. கிருஷ்ணகுமார்  இலங்கைக்கிளை தலைவர் திரு த. கமலன் ஊடாக வவுனியாவில்  வைத்து கையளித்திருந்தார் .

அதேபோல் யாழ் மாவட்டத்திற்கென WTBF இங்கிலாந்துக் கிளையினால் ; குறிப்பாக இங்கிலாந்துக்கிளை நிர்வாக குழுவினர் அனைவரது பங்களிப்புடன் அனுப்பப்பட்ட இயந்திரமும் WTBF இன் யாழ் மாவட்ட பட்மின்ரன் அபிவிருத்திக்குழுவிடம் விரைவில் ஒப்படைக்கப்படவுள்ளது .

நம்மவர்களை ஊக்குவித்து,திறமைமிக்க வீரர்களாக முதல் தர வரிசையில் நகர்த்துவதற்கு எங்களால் முடிந்தவரை ஒன்றுசேந்து கைகொடுப்போம்.

இவ் அடிப்படையில் தாயகத்தின் விளையாட்டுத்துறைக்கு உயிர்ப்பளிக்கும் உன்னத பாதையில் நீங்களும் தாராளமாக இணைந்துகொள்ள ஆர்வமிருப்பின் எம்முடன் தொடர்புகொள்ளுங்கள் .

நன்றி
WTBF நிர்வாகம்