உலகத் தமிழர் பூப்பந்தாடச் சம்மேளனத்தின் (WTBF) ஆரம்ப கால உறுப்பினரும் (2013) அதன் ஆலோசகருமான ROMAN PECHOUS அவர்களும் அவர் துணைவியாரும்  இணைந்து வட  கிழக்கு பிள்ளைகளுக்கு பூப்பந்தாட்ட  உபகாரணங்கள் அனுப்பிவைப்பு.

இவர்கள் இருவரும் கடந்த வருடம்  WTBF இனால் வருடம் தோறும் வட கிழக்கு ரீதியாக நடை பெற்றுவரும் பூப்பந்தாட்டச் சுற்றுப் போட்டியில் (2018 ல்) மூன்று நாட்களும் கலந்து, அவர்களின் திறமைகளை நேரில் பார்த்து வியந்தார்கள். அத்துடன் பலர் பாத அணி இல்லாமலும் விளையாடும் உபகரணங்கள் இல்லாமலும் இருந்ததனை நேரில் பார்த்த இவ் இருவரும் இணைந்து சுவிஸ் நாட்டவர்களிடம் விளையாட்டு உபகாரணங்களை சேகரித்து அனுப்பியுள்ளார்கள்.

சென்ற வருடம் வட  கிழக்கு மாகாணங்களுக்குச் சென்று பூப்பந்தாடச் சம்மேளன நிர்வாகிகள் மற்றும் WTBF ன் அங்கத்தவர்களை சந்தித்து பல கலந்துரையாடங்களை மேற்கொண்டிருந்தார்கள்  என்பது குறிப்பிடத்தக்கது.

அவர்கள் தமிழர்கள் மத்தியில் அதிக அன்பு கொண்டவர் என்பது பலருக்கும் தெரியும். உலகத் தமிழர் பூப்பந்தாடச் சம்மேளனத்தின் இமாலய வெற்றிக்கு ரோமன் அவர்களின் பங்கு மிகப் பெரியது. வெள்ளை இனத்தவராக இருந்தும் எமது மக்களில் அக்கறை கொண்ட மனிதர்களில் இவர்களும் அடங்குவார்கள்.