68 வது தேசியமட்ட பூப்பந்தாட்ட போட்டி

உலகத் தமிழர் பூப்பந்தாட்ட பேரவையின் முக்கிய குறிக்கோள்களில் ஒன்று எமது இளைஞர்கள் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்திலான போட்டிகளில் பங்குபற்றவேண்டும் அவற்றில் வெற்றிபெற வேண்டும் என்பதுடன் ,அவற்றையடைந்திட எம்மாலான உதவிகளை நல்கி ஊக்ககமளித்து உந்துசக்தியாக இருக்கவேண்டுமென்பதே.
அதனடிப்படையிலேயே உலகத்தமிழர் பூப்பந்தாட்ட பேரவையினால் வடக்கு கிழக்கு மாகாணங்களில் பயிற்சிப்பட்டறைகளையும் போட்டிகளையும் மாவட்ட மற்றும் மாகாணரீதியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது .அத்துடன் இந்த மட்டங்களில் இனங்காணப்படுகின்ற இளம்வீரர்களுக்கு எம்மாலான உபகரணங்கள் வழங்கி ஊக்குவிக்கப்பட்டும் வருகின்றது . விளையாட்டுத்துறையில் ஆர்வமுள்ள ஆசிரியர்களுக்கும் பயிற்சிப்பட்டறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்ந செயற்பாடுகளில் புலம்பெயர்நாடுகளின் கிளையமைப்பினர் நிதிரீதியாகவும் தாயகக்கிளை மற்றும் தாயக மாவட்ட அபிவிருத்தி நிர்வாக உறுப்பினர்கள் பெருமளவில் பக்கபலமாக செயற்பட்டுவருகின்றார்கள்.
தற்போது இப்போட்டியில் பங்குபற்றுகின்ற 10 வீரர்களுக்காக உலகத்தமிழர் பூப்பந்தாட்டப்பேரவையால் ரூபா 25,000 வழங்கிஊக்குவிப்பட்டுள்ளது
இவ்வருடம் இலங்கை பட்மின்ரன் சம்மேளனத்தின் தலைவரும் தேசிய போட்டிகளில் பங்குகொள்ளும் வீரர்களுக்கு தன்னாலியன்ற ஒத்துழைப்பை வழங்கியுள்ளார்.
எமது வீரர்களுக்கு, குறிப்பாக வடக்குகிழக்கிலிருந்து பங்குபெறும் எமது வீரர்களுக்கு ; இவ்வருடம் தொடக்கம் தேசியமட்ட பூப்பந்தாட்ட போட்டிகளில் வெற்றி பெறும்போது ;
வீரருக்கு ( 50,000 ) ஐம்பதாயிரம் ரூபாவும் அந்த வெற்றியாளரை உருவாக்கிய பயிற்சியாளருக்கு (50,000 ) ஐம்பதாயிரம் ரூபாவும் வழங்குவதாக தீர்மானித்துள்ளோம் . இந்த திட்டத்தின்மூலம் பங்குபற்றும் போட்டியாளர்களையும், பயிற்சியை வழங்கி வழிநடாத்தும் பயிற்றுவிப்பாளர்களையும் , உற்சாகத்துடன் ஈடுபடவைத்து , ஊக்கமளித்து ,இந்த போட்டிகளில் வெற்றிகளைப் பெறவேண்டும் என்பதேயாகும். எம்மவர்கள் கல்வித்துறைக்கு ஈடாக, விளையாட்டுதுறையிலும் சிறந்தவர்களாக திகழவேண்டும் என்பது எமது உலக தமிழர் பூப்பந்தாடட பேரவையின் பெருவிருப்பம் ஆகும்.
நன்றி
உலகப்பூப்பந்தாட்டப்பேரவை
WTBF ( World Tamil Badminton Federation )