WTBF சுவிஸ் கிளையின் பூப்பந்தாட்டப்போட்டி 2020 - II

உலகத் தமிழர் பூப்பந்தாட்ட பேரவையின் சுவிஸ் கிளையின்  2020 ற்கான இரண்டாவது பூப்பந்தாட்ட போட்டி (17 .10 .2020 ) ஒக்ரோபர் 17 ம் திகதி Langanthal என்னும் இடத்தில் மிகச் சிறப்பாக,நடைபெற்றது.

ஆறு வித்தியாசமான  பிரிவுகளில் தனி  ஆட்டம், இரட்டையர் ஆட்டம் கலப்பாட்டம் என,
ஆண் பெண்கள் அனைவருக்குமான போட்டிகள் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

முக்கியமாக இந்த போட்டியில் அனைத்து இனத்தவர்களும் இணைந்து விளையாடியது மிக முக்கியமானது.

தற்போதைய கொரோனா காலத்திலும்,
அதற்கு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு போட்டிகள் அனைத்தும் சிறப்பாக நடைபெற்றது.

அனைத்து போட்டிகளும் மிக விறுவிறுப்பாகவும், தகுதி கூடிய விளையாட்டாகவும் காணப்பட்டது.

காலை 9 மணிக்கு சரியாக ஆரம்பிக்கப்பட்ட விளையாட்டு நிகழ்வுகள் பரிசில் வழங்கும் நிகழ்வுடன்   இரவு 7 மணிக்கு இனிதே நிறைவடைந்தது.

பங்குபற்றிய அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாக காணப்பட்டனர்.
அத்துடன் அடுத்தவருடம்  இன்னும் அதிகமானவர்கள்  வந்து கலந்து கொள்ளவேண்டும் என்ற தமது அவாவினை  நிர்வாகத்தினரிடம்  தெரிவித்து விட்டும் சென்றிருந்தார்கள்.

மிகவும் சிறப்பாக    போட்டியை நடத்திய WTBFசுவிஸ் கிளை செயற்பாட்டாளர்கள்   மகிழ்ச்சியாகவும் மனநிறைவுடனும் காணப்பட்டார்கள்.

தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையிலும் பங்குபற்றிய போட்டியாளர்கள், WTBF சுவிஸ் கிளை நிர்வாக செயற்பாட்டாளர்கள் அனைவர்க்கும் உலகத் தமிழர் பூப்பந்தாட்டப்பேரவையின் சிறப்பான பாராட்டுக்களும் நன்றிகளும்.

Ranking List

MD Open
1. Prakash Andavar / Piraveen Selvakumar TBC
2. Delinson Shanmugalingam / Nitharsan Thirunavukkarasu Lausanne
3. Lutharsanen Kunam / Manuel Sommerhalder FC Aarau

MS Open
1. Lokman Mohammad Bern
4. Delinson Shanmugalingam Lausanne
5. Nitharsan Thirunavukkarasu Lausanne

XD Open
1. Prakash Andavar / Tamanna Rajput TBC
2. Sasikumar Saravanamuthu / Uthayakumar Latcy BC St.Margrethen
3. Balaji Kumbalingam / Sonja Wüest BC Rothenburger

WS Open
1. Sonja Wüest BC Rothenburger
2. Tamanna Rajput
3. Nithujaa Thirunavukkarasu Lausanne

MS O40
1. Stefan Reinhart BC Rothenburger
2. Rajakumar Seevaratnam
3. Sasikumar Kani

MD O40
1. Gajan Canagasaby / Balaji Kumbalingam Luzern
2. Suraj Rajput / Milind Sharma Zurich
3. Sujeevan Rajah / Sasikumar Ratnam Luzern