WTBF இன் ஸ்தாபகர் திரு கந்தையா சிங்கம் அவர்களுக்கு "சாதனையாளர்களை உருவாக்கும் சாதனையாளர் " என்ற மதிப்புமிக்க விருது

WTBF இன் ஸ்தாபகர் திரு கந்தையா சிங்கம் அவர்கள் பிரித்தானிய மண்ணில் வைத்து "சாதனையாளர்களை உருவாக்கும் சாதனையாளர் " என்ற மதிப்புமிக்க விருது வழங்கி பெருமைப்படுத்தப்பட்டிருந்தார்.

உலகத் தமிழர் பூப்பந்தாட்ட பேரவை,உலகத்தமிழர் சதுரங்கப் பேரவை ஆகியவற்றின் ஸ்தாபகர் திரு கந்தையா சிங்கம் Kandiah Singam அவர்களுக்கு கடந்த பெப்ரவரி மாதம் 29 ஆம் திகதி லண்டனில் நடைபெற்ற MYSTIC WAVES 2020 என்ற பெரும் இசை நிகழ்வில் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
Sruthys Entertainment எனும் நிறுவனத்தினால் MYSTIC WAVES 2020 எனும் பிரமாண்டமான இசை நிகழ்வு Fairfield Halls Croydon UK நடைபெற்றது.
இதில் தென்னிந்திய பிரபல பின்னணி பாடகர் விஜய் பிரகாஷ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற "The World’s Best" என்ற நிகழ்வில் பியானோவை (Piano) இதுவரை எவருமே வாசிக்க முடிந்திராத முறையில் வாசித்து ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை வென்று உலக சாதனை படைத்த 13 வயது மட்டுமே நிரம்பிய சென்னை தமிழ்ச்செல்வன் லிடியன் நாதஸ்வரம் மற்றும் பல முக்கிய கலைஞர்கள் இதில் பங்கு பற்றிருந்தார்கள்.
இத்தகைய முக்கியமான நிகழ்வில் வைத்தே Sruthys Entertainment நிறுவனரும் ,மற்றும் WTBF பிரித்தானிய கிளைச் செயலாளருமாகிய திரு. ஆறுமுகம் ரவீந்திரன் (Arumugam Raveendran ) மற்றும் WTBF பிரித்தானியக் கிளைத் தலைவர் திரு. பாலா திருமாறன் பொருளாளர் திரு. சுப்பிரமணியம் கஜந்தன் ஆகியோர் இணைந்து வழங்கி கௌரவித்திருந்தார்கள்.
திரு கந்தையா சிங்கம் ( Kandiah Singam ) அவர்கள் உலகத் தமிழர் பூப்பந்தாட்ட பேரவையினை 2013 ஆண்டு சுவிஸ் நாட்டில் ஸ்தாபித்திருந்தார்.
இந்த அமைப்பே ஒவ்வொருவருடமும் உலகத் தமிழர்கள் அனைவரையும் விளையாட்டின் மூலம் ஒருங்கிணைத்து உலகக்கிண்ண பட்மின்டன் போட்டிகளை நடாத்தி வருகின்றது .
அத்துடன் போட்டியாளர்களை ஊக்குவித்து தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் சங்கமிக்க வழிகாட்டி ஊக்குவித்தும் வருகின்றது.
அது மட்டுமன்றி தாயகத்திலும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் மிகவும் சிறப்பான முறையில் செயற்பாடுகளை மேற்கொண்டு, ஊக்குவித்து, தேசிய மட்டத்தில் சிறப்பான நிலையை அடைந்திட பூரண ஒத்துழைப்பை வழங்கியும் வருகின்றது.
கந்தையா சிங்கம் அவர்களால் உருவாக்கப்பட்ட அமைப்புக்கள்
"Tamil Mandram Athletic Meet" in Luzern, Switzerland 1998
“CATS” Chess Association of Tamils in Switzerland 2006
“WTBF“ World Tamil Badminton Fedatation in Switzerland, 2013
„WTCF“ World Tamil Chess Federation in England, 2019
இதேபோல் சதுரங்க துறையிலும் சுவிசில் தேசிய சர்வதேச போட்டிகளில் பங்குபற்றி 1904 ELO வரையான புள்ளிகள் வரை பெற்றுருந்தார்.
தான் கற்றுக்கொண்ட சதுரங்க அறிவுசார் துறையினை எமது சந்ததிக்கு கடத்த வேண்டும் எனற எண்ணத்தில், 2006ம் ஆண்டில் தாயகப்பபகுதிகளில் சதுரங்கத்தினை பரப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்தும் இன்றுவரை வளர்ச்சிக்கான பல வகைகளிலும் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.
CATS அமைப்பின் ஊடக ஐரோப்பிய ரீதியில் பல போட்டிகளை நடத்தி, பல சிறுவர்களை ஊக்குவித்து, அவற்றில் பலர் தேசிய போட்டியில் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது
திரு கந்தையா சிங்கம் அவர்கள் கடந்த வருடம் (2019) உலகத் தமிழர் சதுரங்க பேரவையையும் அடித்தளமிட்டு ஆரம்பித்து வைத்துள்ளார்.
இவ்வாறாக நமது எதிர்கால சந்ததியினர்கள் சாதனையாளர்களாக மாற சந்தர்ப்பங்களை உருவாக்கிய சாதனையாளரே திரு. கந்தையா சிங்கம்.
அந்த வகையில் அவர் வாழும் நாளிலேயே அவரை வாழ்த்தி கௌரவிக்க சந்தர்ப்பம் கிடைத்தது சிறப்பான மகிழ்ச்சியென நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பெருமையுடன் குறிப்பிட்டிருந்தார்கள்.

இது தொடர்பாக தமிழ்வின் இணையத்தளத்திலும் செய்திவெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது