உலகத் தமிழர் பூப்பந்தாட்ட பேரவையின் எட்டாவது உலக கிண்ண போட்டிகள் 2023
சுவிஸ் நாட்டின் பேர்ண் நகரில் கடந்த 8 ம் 9ம்திகதி இரண்டு நாட்களும் மிகவும் சிறப்பாக இறகுப்பந்துப் போட்டி நடந்தேறியுள்ளது. இதில் அவுஸ்திரேலியா தொடக்கம் அமெரிக்கா வரையிலான தமிழ் மக்களின் பட்மிண்டன் விளையாட்டு வீரர்கள்சிறுவர்கள் முதல்70 வயதுக்கு மேற்பட்டோர் வரை ஆண்கள் பெண்கள் என இருபாலாரும் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.
எட்டாம் திகதி சனிக்கிழமை காலை 8 மணிக்கு மங்கல விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பித்தது. அதனைத்தொடர்ந்து கொடிய போரினால் உயிரை தியாகம் செய்த மறவர்களுக்காகவும் பொது மக்களுக்காகவும் மௌன பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது.
விசேடமாக 2018 ஆம் ஆண்டு நோர்வேயில் நடைபெற்ற 7ம் உலக கிண்ணப் போட்டியின் பின்னர்நி ரந்தரமாக உலகை விட்டு அகன்றுவிட்ட உலக தமிழர் பூப்பந்தாட்ட பேரவையின் முக்கிய நிர்வாக உறுப்பினர்களான
மோகன் ( பிரான்ஸ்) பாலா அண்ணா (பிரான்ஸ்) நிம்மி என்று அழைக்கப்படும் நிர்மலன் (பிரித்தானியா) ஆகியவர்களை நெஞ்சை விட்டு அகலாத கனத்த நினைவுகளுடன் நினைவு கூர்ந்து மலர்கள் தூவி அஞ்சலிக்கப்பட்டிருந்தது. தொடர்ச்சியாக கலாநிதி திரு அகளங்கன் அவர்கள் இயற்றிய தமிழ்த்தாய் கீதம் இசைக்கப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து உலகத் தமிழர் பூப்பந்தாட்ட பேரவையின் தலைவர் தங்க ராஜா சிவஸ்ரீ அவர்கள் தலைமை உரையாற்றி அனைத்து வீரர்களையும் வரவேற்றுக்கொண்டார்.
நடைபெற்ற இந்த மைதானமானது 24 விளையாட்டு தளங்களைக் கொண்ட மிகப்பெரிய மைதானமாக இருந்தது. இந்த மைதானத்தினை பெற்றுத்தருவதற்கு மிகவும் உறுதுணையாக இருந்த அதற்கு பொறுப்பாக இருந்த சுவிஸ் நாட்டுவிளையாட்டுத்துறையின் உயர் நிர்வாகிகளான திரு தோமஸ் அவரது துணைவியார் பிறிஸ்கா ஆகியோர் மிகவும் நன்றியுடன் அனைவராலும் பாராட்டப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து இந்த போட்டியின் தலைவரான ரோமான் அவர்கள் போட்டி தொடர்பான விசேட விடையங்களை வீரர்களுக்கு எடுத்துரைத்திருந்தார்.
தொடர்ச்சியாக உலகத் தமிழர் பூப்பந்தாட்ட பேரவையின் ஸ்தாபகர் திருவாளர் கந்தையா சிங்கம் அவர்கள் சிறப்பு உரையாற்றியிருந்தார்.
இதேபோல் தாயகத்தில் இருந்து வருகை தந்திருந்த முனை நாள் யாழ் மேயர் ஆனோல்ட் அவர்களும் உரையாற்றி இருந்தார்.
2014 ஆம் ஆண்டு முதல் உலகத் தமிழர் ஒப்பந்தாட்ட பேரவையின் வளர்ச்சியில் பெரும்பங்காற்றி வரும் கனடா நாட்டைச் சேர்ந்த ஸ்ரீ நாராயணதாஸ் அவர்களும் இந்த நிகழ்வில்சிறப்பு அதிதியாக கலந்து சிறப்பித்து இருந்தார்.
அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாட்டு வீரர்களும் குழு தமது நாட்டு வீரர்கள் அனைவரும் இணைந்து குழு குழு ரீதியாக புகைப்படங்கள் எடுத்துக் கொண்டதுடன்வந்திருந்த வீரர்கள் பார்வையாளர்கள் ஒழுங்கமைப்பாளர்கள் என அனைவரும் இணைந்த வகையில் ஓர் பொதுவான குழுப்புகைப்படமும் எடுக்கப்பட்டிருந்தது.
250 பேர் வரையிலான போட்டியாளர்கள் பங்கு பற்றிய இந்த மாபெரும் உலக கிண்ணம் மிகவும் பெருமதியான பல வீரர்களை ஒன்று திரட்டி சங்கமித்திருந்தது. குறிப்பாக இந்த வருடம் தமிழ் மக்கள் அல்லாதவர்களும் கலந்து கொள்கின்ற சர்வதேச சமூகத்தினருக்கான சிறப்பு பிரிவும் இடம்பெற்று இருந்தது. இதில் சர்வதேச தரத்தில் இருக்கின்ற பலர் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.
சிறுவர்கள், பெண்கள், முதியோர் போன்றோரின் விளையாடுத் திறன்களை பார்த்த பார்வையாளர்கள் தங்களை வியப்படைய வைத்ததாக பேசிக் கொண்டார்கள். WTBT ன் நிர்வாகக் திறனை அவதானித்த பலரும் வெளிப்படையாக பாராட்டியதை அவதானிக்க முடிந்தது.
சுமார் 15 மணிக்கு போட்டிகள் யாவும் நிறைவடைத்ததைத் தொடர்ந்து, வெற்றிக் கிண்ணங்கள், பதக்கங்கள், பணப்பரிசில்கள் என வெற்றியாளர்களுக்கு வழங்கப்பட்டது . பரிசளிப்பு வைபவம் சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் வரை அதே மண்டபத்தில் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து விளையாடு வீரர்கள் அவர்கள் உறவினர்கள் என சுமார் 400 பேர்வரை வேறு ஒரு மண்டபத்தில் ஒன்றுகூடி, இரவு உணவினை உண்டு களித்து ஆடிப்பாடி அதிகாலை ஒரு மணிவரை மனமகிழ்ந்தார்கள். அத்துடன் இனிதே 8வது WTBT 2023 போட்டி நிகழ்வு நிறைவடைந்தது.