10 வது இறகுப்பந்து உலகக் கிண்ணப் போட்டி- 2025 பிரான்ஸ்
«10th WTBT 2025 FRANCE»
இப்போட்டிகள் பிரான்ஸ் நாட்டிலே Argentan நகரில் இந்த மாதம் 19, 20 ஆம் திகதிகளில் மிகவும் சிறப்பாக
நடந்து முடிந்திருக்கின்றது.ஆரம்ப நிகழ்வாக அமைதி வணக்கம், திரு.அகளங்கன் அவர்களின் தமிழ்த்தாய் வாழ்த்து, பிரான்ஸ் தேசிய கீதம் மங்களவிளக்கேற்றல் என சம்பிரதாய நிகழ்வுகள் அழகாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் நகர மேயர் திரு FREDERIC LÉVEILLÉ அவர்களும் துணை மேயர் திரு YANNICK JOUADE அவர்கள் கலந்து கொண்டிருந்தார்கள். தொடர்ச்சியாக WTBF ன் தலைவர் திரு ஜெகதரன் கதிர்வேல் அவர்களும் WTBFன் ஸ்தாபகர் திரு கந்தையா சிங்கம் அவர்ள் உரையாற்றி இருந்தார்கள்.
அதனைத் தொடர்ந்து WTBF ன் பிரதம நடுவர் திரு Roman Pechous போட்டி நிபந்தனைகளை அறிவித்த பின்னர் போட்டி ஆரம்பமானது.
போட்டிகள் 3 வெவ்வேறு மைதானங்களில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டிகளுக்கு வழமை போன்று இந்தியா, மலேசியா, அமெரிக்கா, கனடா, டென்மார்க், ஜெர்மனி, பிரான்ஸ், சுவிஸ், அயர்லாந்து, நோர்வே, ஜப்பான், சுவீடன், பெல்ஜியம், பின்லாந்து, பிரித்தானியா நாடுகளில் பரந்து வாழும் எமது வீரர்கள்வருகை தந்து கலந்து சிறப்பித்திருந்தார்கள்.
16 நாடுகளில் இருந்து 276 க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் 27 பிரிவுகளில் ஆண் பெண்கள் என இரு பாலாரும் கலந்து கொள்ளும் வகையில் இந்த போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இவ்வருடமும் வழமை போல கடந்த போட்டிகளை விட கலந்துகொண்ட போட்டியாளர்களின் திறமையானது மிகவும் உயர்ந்த தரத்தை கொண்டிருந்தததாகவும். சவால் மிக்க போட்டிகளாகவும் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் தேசிய, சர்வதேச தர பட்டியல் வீர வீராங்கனைகள் அதிகம் கலந்து கொண்டதும் மகிழ்ச்சி.
எமது மக்கள் கூடுதலாக செறிந்து வாழுகின்ற கனடா மற்றும் இங்கிலாந்து நாடுகளில் இருந்து கூடியளவான போட்டியாளர்கள் பங்கு பற்றியிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போட்டிகள் அனைத்தும் பாரிஸ் நகரிலிருந்து 300 கிலோமீற்ரர் தொலைவில் நடைபெற்ற பொழுதும் இறகுப்பந்து விளையாட்டை பெரிதும் மதிக்கின்ற ஒரு சமுதாயமாக 276க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பார்வையாளர்கள் கலந்து கொண்டது என்பது மிகவும் பாராட்டுதற்குரியது
இந்தப் போட்டி வெற்றி பெறுவதற்கு பிரான்ஸ் நாட்டவர்களின் கழகமாகிய Argentan Badminton Club (BABA) கழகம் முதுகெலும்பாக இருந்ததுடன், இந்த நகரத்தை ஆளுகின்ற நகராட்சி மன்றம் தொடக்கம் அந் நகர மக்கள் அனைவருமே இணைந்த வகையில், எங்கள் மக்கள் அனைவரையும் வரவேற்று சிறப்பாக அந்தப் போட்டியை நடத்த உதவி புரிந்தது அனைவரும் வியக்கத்தக்கும் வகையில் அமைந்திருந்தது.
இந்த போட்டிகளை வெள்ளை இனத்தவர்கள் தாங்களே முன் நின்று, எங்களுடன் இணைந்து செயற்படுத்தி வெற்றி வாகை சூடி அழகு பார்த்திருந்தது, எமது வீரர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் வியப்பை ஏற்படுத்தி இருந்த்தது.
அத்துடன் WTBF கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து தமிழர் அல்லாதார் கலந்து கொள்வதற்காக சர்வதேச போட்டி ஒன்றையும் ஒழுங்கமைத்திருந்தோம். அதில் சகோதர இன சிங்களப் போட்டியாளர் ஒருவர் இலங்கையில் இருந்து வந்து கலந்து கொண்டது முக்கியமானது. மற்றைய வீர வீராங்கனைகள் அனைவரும் வெள்ளை இனத்தவர்கள் ஆகும். போட்டிகள் உயர் தரத்தில் அமைந்திருந்தது. அனைவராலும் வியர்த்து பார்த்த போட்டியாக அமைந்திருந்தது.
ARGENTAN நகர மேயர் எமக்கு தேவையான பல வளங்களையும் இலவசமாக தந்து உதவியது குறிப்பிடத்தக்கது. இந்த வகையில் இந்த Argentan நகரத்திற்கும் அந்த நகரத்தின் பிதாவுக்கும் இந்த BABA விளையாட்டு கழகத்திற்கும் தமிழர்களாகிய நாம் எமது மனம் நிறைவான நன்றிகளை தெரிவிகின்றோம்..
இரண்டு நாட்களாக இடம்பெற்றன. இந்த போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 5 மணிக்கு மைதானத்திலேயே பரிசளிப்பு நடைபெற்றது,
அதனைத் தொடர்ந்து இரவு இடம் பெற்ற மாபெரும் விருந்து உபசார நிகழ்வில் (Gala Dinner) இப் போட்டிகளுக்கு உறுதுணையாக செயல்பட்ட பலரும் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர்.
இந்த போட்டிகள் அரை இறுதி ஆட்டத்திற்கு முன்பு வரை அனைத்து போட்டிகளுமே நடுவர்கள் துணையின்றி, விளையாடுகின்ற வீரர்களே தமது வெற்றி தோல்விகளை நிர்ணயிக்கின்ற நடுவர்களாக செயற்பட்டிருந்தார்கள். இவ்விடயம் WTBFல் ஆரம்ப காலம் தொடக்கம் இன்று வரை தொடர்ந்தாலும், இந்த வருடப் போட்டியில் இந்த முக்கியத்துவம் மிகவும் உன்னதமாக உணரப்பட்டு நேரிய கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டு இருப்பதை அவதானிக்க முடிந்தது.
இந்த போட்டியில் வெற்றியீட்டிய வீரர்கள் இதனை ஒழுங்கு செய்த WTBF குழுவின் உறுப்பினர்கள் இந்த போட்டியை பொறுப்பேற்று நடத்திய குழுவினர்கள் (WTBT) அதற்கு ஒத்துழைத்த இந்த நகரத்தின் தொண்டர்கள் volunteers அனைவருக்கும் மனமார்ந்த, பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வதுடன் விளையாட்டினால் ஒன்றிணைவோம் விளையாட்டுக்காக ஒன்றிணைவோம் என்ற தாரக மந்திரத்துடன் செயற்படுகின்ற WTBF உள்ப்பட அனைவருக்கும் எமது நன்றியை தெரிவித்து கொள்கின்றோம். அடுத்த வருடம் இங்கிலாந்து நாட்டில் நடைபெறுவதற்கான அறிவித்தலும் இந்த போட்டி முடிவில் அறிவிக்கப்பட்டிருந்தது
இங்கிலாந்து தேசத்தில், இதனை விட இன்னும் சிறப்பான முறையில் போட்டிகள் நடந்திட வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன் இந்த போட்டியில் பங்கு கொள்ளத் தவறியிருந்த ஏனைய வீரர்களும் எதிர்வரும் ஆண்டில் தவறாது கலந்து சிறப்பித்து உங்கள் திறமைகளை மற்றவர்களுக்கும் வெளிப்படுத்தி உங்களது திறமைகளை பகிர்ந்து, அவர்களும் சர்வதேச அரங்கில் கால் பதிக்கும் வகையில் உங்களது ஆலோசனைகளையும் வழிநடத்தல்களையும் வழங்கி உதவுமாறு அன்பாக கேட்டுக் கொள்கின்றோம்.
அதேபோன்று இதனை நடத்துகின்றவர்கள் தங்களது நேரங்களை அர்ப்பணிக்கின்றார்கள். போட்டியாளர்கள் தங்களது திறமைகளை அர்ப்பணிக்கின்றார்கள். இந்த போட்டிகளை நடத்துவதற்கும், திறமைகளை வெளியுலகம் உணர்வதற்குரிய களங்களை அமைப்பதற்கும் ,மிகப்பெரும் நிதிச் சவால்களை எதிர்நோக்கியே WTBF நகர்ந்து கொண்டிருக்கிறார்கள் சவாலை சமாளிக்க பல பேர் தமது கரங்களை இணைந்திருக்கின்றார்கள் இணைந்து கொண்டும் வருகின்றார்கள்.
இவர்களால் தான் இவை அனைத்தும் சாத்தியமானது ஆகவே இது சார்ந்த விடயங்களை மேலும் உங்களால் உயர்ச்சி செய்யும் வகையில் உங்களது அனுசரணையை வழங்கி மேலும் இதனை வளர்ச்சி பெற செய்ய உரிமையுடன் எதிர்பார்த்திருக்கின்றோம்.
மீண்டும் 11 வது உலக கிண்ணத்தில் சந்திக்கும் வரை உங்கள் அனைவரிடமும் விடை பெற்றுக் கொள்கின்றோம். வெற்றி பெற்றவர்களுக்கு பெருமையுடன் வாழ்த்துக்கள் கூறி நிற்கின்றோம்
நன்றி
உலகத் தமிழர் பூப்பந்தாட்டப் பேரவை
செய்திப் பிரிவு
