பிரான்ஸ் தேசிய ரீதியில் நடைபெற்ற 65 வயதுக்கு மேற்பட்டோர்க்கான veteron என்று அழைக்கப்படுகின்ற போட்டி பிரிவில் எமது இரு வீரர்கள் பங்குபற்றியிருந்தார்கள்.
சேதுராமன் கணேசன் ( தமிழ் நாட்டை பூர்வீகமாகவும் சிங்கப்பூரை பிறப்பிடமாகவும் பிரான்சினை வாழ்விடமாகவும் கொண்டவர்) இந்தப் போட்டியில் பல சாதனைகளை நிலைநாட்டியுள்ளார்.
ஆண்கள் ஒற்றையராட்டம் (Singles) கலப்பு ஆட்டம் (mixed doubles ) ஆகியவற்றில் முதலாமிடத்தை பெற்றதுடன் ஆண்கள் இரட்டையர் ஆட்டத்தில் (Mens doubles) இறுதி ஆட்டத்தில் இரண்டாம் இடத்தையும் பெற்றிருந்தார்.
இந்த போட்டியில் முதல் முறையாக உலகத் தமிழர் பூப்பந்தாட்ட பேரவையின் பிரான்ஸ் கிளையின் முனை நாள் தலைவரும் தற்போதைய நிர்வாக உறுப்பினருமாகிய ஆகிய திரு ராஜ்குமார் அவர்களும் பங்கு பற்றி சிறப்பாக தனது விளையாட்டு ஆளுமையை நிரூபித்திருந்தார்.
65 வயதுக்கு மேற்பட்ட நிலையிலும் எமது வீரர்கள் இத்தகைய போட்டிகளில் பங்குபெறுவது மிகவும் பெருமைமிக்க ஒரு விடயம் என்பதுடன் அதில் வெற்றி வாகை ஈட்டுவது என்பது மிக மிக சிறப்பானதும் பாராட்டுதற்குரியது விடயமாகும்.
இத்தகைய விளையாட்டு சிறப்புகளை உலகத்தமிழர் பூப்பந்தாட்ட பேரவைக் குடும்பம் பாராட்டி மகிழ்வதுடன் அவர்கள் இன்னும் தொடர்ந்து விளையாடி பல வெற்றிகளை குவித்திடவும் வாழ்த்தி நிற்கின்றது...