இங்கிலாந்தின் Surrey மாவட்டப் போட்டியில் அஸ்வியா அகிலரட்ணம் தேஜாஸ் வேணுகோபால் சாதனையாளர்கள்.
Surrey மாவட்டத்திற்கான 12 மற்றும் 14 வயதுக்குட்பட்டவர்களுக் கான போட்டி கடந்த 23 ஜனவரியன்று நடைபெற்றிருந்தது.
இப் பூப்பந்தாட்ட போட்டியில் எமது இளைய வீரர்கள் தடம் பதித்துள்ளார்கள். அந்த வகையில் 14 வயதிற்கு உட்பட்ட பெண்கள்
ஒற்றையர் போட்டியில் அஷ்வியா அகிலரத்னம் 14 வயதிற்குட்பட்டோருக்கான தனிநபர்( Singles ) பிரிவில் முதலிடத்தை பெற்றிருக்கின்றார்.அதேபோல்12 வயதிற்குட்பட்டோர் பிரிவில் தேஜாஸ் வேணுகோபால் 2 ம் இடத்தைப் பெற்றிருக்கின்றார். இத்தருணத்தில் இவ் இருவருக்கும் உலகத்தமிழர் பூப்பந்தாட்ட பேரவை சார்பாக பாராட்டுக்களை பெருமகிழ்வுடன் கூறிக் கொள்கின்றோம்.
அத்துடன் இவ்வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பயிற்றுநர் ,பெற்றார் ஆகியோருக்கும் எமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
தாயகம் உட்பட புலம்பெயர் தேசங்களின் பெரும்பாலான நாடுகளில் அண்மைய காலங்களில் நடைபெறும் பூப்பந்தாட்ட போட்டிகளில் நம்மவர்களின் வெற்றிப்படிகளை அடிக்கடி அவதானிக்கக்கூடியதாக உள்ளது. இதற்காக பெற்றோர் காட்டுகின்ற அக்கறை செலவிடுகின்ற நேரம் பயிற்றுவித்தலுக்காக செலவழிக்கின்ற நிதி என்பவை கணிசமானதாகவே இருக்கின்றது . இவர்களின் வெற்றிக்கு இன்னும் வலுச்சேர்க்க விளையாட்டுத்துறை சார்ந்த ஆர்வலர்களது ஊக்குவிப்பும் பங்களிப்பும் கிடைக்குமேயானால் அவர்களால் இன்னும் பல சாதனைகள விரைவாக சாதிக்கமுடியும்.இதற்கு வலுச்சேர்க்க நிச்சயமாக நம்மவர்கள் பலர் முன்வருவார்கள் என்ற அசையாத நம்பிக்கை அனைவருக்கும் உண்டு.
உலகத்தமிழர் பூப்பந்தாட்டப்பேரவையின் முக்கிய நோக்கம் இத்தகைய வீரர்களை இனம்கண்டு ஊக்குவிப்பதுடன்,அவர்களைப் போன்ற இன்னும் பல வெற்றியாளர்கள் உருவாவதற்கு ஊக்கமளிக்கவேண்டும் என்பதே. இத்தொடரின் இரட்டையர் ஆட்டம் கலப்பு இரட்டையர் ஆட்டம் ( double ,mixe double) எதிர்வரும் மார்ச் மாதம் 3ம் திகதி நடைபெறவுள்ளது. இதிலும் இவர்களது வெற்றி தொடர வாழ்த்துகின்றோம். விளையாட்டினால் ஒன்றிணைவோம் விளையாட்டிற்காக ஒன்றிணைவோம்.