உலகத் தமிழர் பூப்பந்தாட்ட பேரவையின் , 6-ஆவது வடக்கு கிழக்கு மாகாண பூப்பந்தாட்ட போட்டிகள், கிளிநொச்சி உள்ளக விளையாட்டரங்கில் ,வடமாகாண கல்வி அமைச்சின் ஒத்துழைப்புடன், 30.08.2019 தொடக்கம் மூன்று நாட்களாக நடைபெற்றது.
அதிகளவான வீர வீராங்கனைகள் கலந்து கொண்டதை கருத்தில் கொண்டு ; சில போட்டிகள் அறிவியல் நகர் பல்கலைக்கழக உள்ளரங்கிலும் ,இராணுவ முகாமின் உள்ளரங்கிலும் நடைபெற்றது .
ஆரம்ப நாள் நிகழ்வின் பிரதம விருந்தினராக WTBF இன் ஸ்தாபகரும் நிர்வாக இயக்குனருமான திரு கந்தையா சிங்கம் ( சுவிஸ் ) அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக உலகத்தமிழர் பூப்பந்தாட்ட பேரவையின் செயலாளர் திரு ரமேஷ் விநாயகம் ( நோர்வே) , இலங்கை சார் பட்மின்ரன்துறை அபிவிருத்திக்கான நிர்வாக இயக்குனர் திரு அன்ரனி ஜெயக்காந்த்( கனடா), மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் திரு எம் ஆர் மோகனதாஸ் ,மாவட்ட விளையாட்டு இணைப்பாளர் திரு எல்.அணுரகாந்தன்ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள் .கிளிநொச்சி மாவட்ட பூப்பந்தாட்ட சங்கத்தின் தலைவர் செயலாளர் பொருளாளர் ஆகியோரும் நிகழ்வில் கலந்து சிறப்பித்தார்கள் .
விசேடமாக வடமாகாண பூப்பந்தாட்ட சங்கம் ,யாழ் மாவட்டபூப்பந்தாட்ட சங்கம், கிளிநொச்சி மாவட்ட பூப்பந்தாட்ட சங்கம் ; ஆகியன இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற ,தமது பூரண ஒத்துழைப்பை நல்கியிருந்தார்கள்.
ஆரம்ப சம்பிரதாய நிகழ்வு ஒழுங்கில் ; மங்கள விளக்கேற்றல், அகவணக்கம் ,வரவேற்புரை என்ற அடிப்படையில் நிகழ்வுகள் ஆரம்பமாகியது.
வரவேற்புரையை திரு அரங்கன் நிகழ்த்தினார்.
இதனைத் தொடர்ந்து வீரர்களுக்கான சத்தியப்பிரமானம் ,அதனைத் தொடர்ந்து நடுவர்களுக்கான சத்தியபிரமாணம் நடைபெற்றது .தொடர்ந்து விழா பிரகடனத்தை திரு கந்தையா சிங்கம் நிகழ்த்தியதோடு ,அவரது உரையும் இடம்பெற்றது.
தொடர்ந்து முதல் நாள் போட்டிகள் இரவு 9 மணி வரை மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்றது .
இரண்டாம் நாள் நிகழ்வுகள் 31 /08/2019 சனிக்கிழமை காலை எட்டு முப்பது மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு இரவு ஒன்பது மணிவரை நடைபெற்றது .இதன் போது பெருமளவான காலிறுதிப் போட்டிகள் நிறைவடைந்தன.
இரண்டாவது சுற்று நிகழ்வில் ;வீரர்கள் மிகவும் விறுவிறுப்பாகவும் ,வெற்றிபெறும் ஆர்வத்துடனும் விளையாடியது, அவதானிக்கப்பட்டது . குறிப்பாக 20 வயதுக்குட்பட்ட ஆண்கள் , பெண்கள் ; 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் ,திறந்த பிரிவு , கலப்பு இரட்டையர் ஆட்டங்கள் மிகவும் விறுவிறுப்பானதாக அமைந்திருந்தது .
மூன்றாம் நாள் நிகழ்வுகள் வழமைபோல எட்டு முப்பது மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றது பெரும்பாலான அரையிறுதி இறுதி ஆட்டங்கள் நடைபெற்றன.
3 ம் நாள் நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண விளையாட்டு திணைக்கள பணிப்பாளர் குருபரன் , R.இராஜசீலன் வடமாகாண கல்வித்திணைக்கள பணிப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள் .
இலங்கை பட்மின்டன் சம்மேளனத்தின் உபதலைவர் S.P.B Suriyapperuma அவர்களும் ,இப் போட்டியின் போது கலந்து சிறப்பித்து மட்டுமன்றி ; போட்டிகளின் தரத்தையும் வெகுவாக பாராட்டியிருந்தார். அத்துடன் இலங்கை பட்மின்ரன் சம்மேளனத்தினால் ,இயன்ற உதவிகளை பெற்று தருவதாகவும் ,தாமாகவே முன்வந்து உறுதி அளித்திருந்தார்.
மூன்றாவது நாள் இறுதி நிகழ்வில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சிவஞானம் சிறிதரன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்டிருந்தார் .
வடக்கு கிழக்கிலுள்ள எட்டு மாவட்டங்களிலிருந்தும் ; எட்டு வயது சிறுவர்கள் முதல் இப்போட்டியில் கலந்து கொண்டிருந்தார்கள் .
போட்டிகளில் காலிறுதி ஆட்டங்கள் ; இறுதியாட்டம் போல, மிகவும் நெருக்கமானதாக விறுவிறுப்பு மிகுந்ததாக அமைந்திருந்தது ;அனைவராலும் வியந்து பாராட்ட கூடியதை அவதானிக்க முடிந்தது.
.கனடாக்கிளையின் ஒழுங்கமைப்பில் ;மூன்று நாட்களும் ,வீரர்களுக்கான மதிய உணவு , ( WTBF - Marketting director) மகேன் வாகீசன் அனுசரணையுடன் ,வழங்கப்பட்டிருந்தது.
இறுதியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கான பதக்கம், பணப்பரிசு, சான்றிதழ் ,என்பன வழங்கப்பட்டது .
அத்துடன், நம்மவர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தி, உலக அரங்கில் உச்சம்தொட்டு , சாதனைபடைக்க வைக்கும் உலகத் தமிழர் பூப்பந்தாட்ட பேரவையின் முதன்மை நோக்கத்தின் ஓர் அங்கமாக தாயகவீர்ர்களின் தரத்தினை உயர்த்தும், தார்மீகசெயற்பாட்டில் ,தன்னலமற்று சேவையாற்றிவரும் ,இலங்கைக்கிளைத் தலைவர் திரு தவராஜா கமலன் ,செயலாளர் பிறின்ஸ் லெம்பேட், ஆகியோர்க்கு WTBF இனால் கௌரவக்கேடயம் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது.